தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி கழுகுமலையில் பேரூர் கழக திமுக சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69 வது பிறந்த நாளையட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கயத்தார் மேற்கு ஒன்றியம், கழுகுமலை பேரூர் கழகத்தின் சார்பில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் காந்தி மைதானத்தில் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில், கழுகுமலை பேரூர் கழக பொருளாளர் முப்புடாதி, அவைத் தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் மாணிக்கம்,ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டக சாலை முன்னாள் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சங்கர், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் துரை, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சதீஸ்குமார், கழக மாணவரணி அமைப்பாளர் அருணாசலம், தகவல் தொழில் நுட்ப அணி ராமச்சந்திரபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி