தூத்துக்குடி வனத்துறை சார்பில் உலக நீர் தினம் மற்றும் உலக சிட்டுக்குருவிகள் தினவிழா..!

முப்பெரும் விழா.
தமிழ்நாடு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை, தூத்துக்குடி வனத்துறை இணைந்து நடத்திய “உலக வனநாள், உலக நீர் தினம் மற்றும் உலக சிட்டுக்குருவிகள் தினவிழா தருவைக்குளத்தில் நடைபெற்றது. தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவ மாணவியர் அதன் பொறுப்பாசிரியர் ரவிக்காந்த் தலைமையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக மண்டல அலுவலர் திவாகர், வனச்சரக அலுவலர் ஜினோ ப்ளஸ்ஸில் ஆகியோர் தலைமை தாங்கினர். தருவைக்குளம் சூழல் சுற்றுலா மைய தலைவர் அமலதாஸ், கிராம கடல்பாதுகாப்பு சுற்றுச் சூழல் மேலாண்மைக்குழு தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்கள். பின்னர் பேரணியாக, முக்கிய வீதிகளின் வழியாக கடற்கரைக்கு சென்றனர்.
பேரணியில்,விழிப்புணர்வு கோஷங்கள் பசுமைப்படை மாணவ மாணவியரால் எழுப்பப்பட்டன. பின் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் சேகரித்த குப்பைகள், பஞ்சாயத்து தூய்மை வாகனங்கள் மூலம், குப்பை கிடங்கிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்வில், வனவர்கள் அருண்குமார், மதன்குமார்,அஸ்வின்,வன காப்பாளர்கள் பாலாஜி, மணிகண்டன், தன்னார்வலர் டிக்கிரோஸ், வன வேட்டை தடுப்பாளர் அஜித் மற்றும் ஆசிரியர் ஜெய கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.