தலைப்பு செய்திகள்
மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம் பரதநாட்டிய நிகழ்வை பொது மக்கள் கண்டு களித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று வருவது மகா சிவராத்திரி. சிவபெருமானை விட்டு பிரியாத சக்தி அனைத்து உயிர்களும் உய்வுற நான்கு காலங்களும் சிவனை பூஜித்த காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.
அதன்படி தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு மாலை தொடங்கி அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னக பண்பாட்டு மையம், அரண்மனை தேவஸ்தானம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் விடிய விடிய நாட்டியமாடி அஞ்சலி செலுத்தினர்.