தலைப்பு செய்திகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடந்தது .
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர மன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா நடந்தது. நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலட்சுமி 12 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வின்சன்ட் ஜோசப் 15வது வார்டில் போட்டியிட்ட உடுமலை நகர செயலாளர் மத்தீன் 33 வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் நகரமன்ற தலைவர் வேலுசாமி உட்பட முப்பத்தி மூன்று உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜெய ராம கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
CATEGORIES திருப்பூர்