15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் பள்ளி மாணவி.

இந்திய பேட்மிட்டன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திருமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி ஆதர்ஷினியை பாராட்டி மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.10,000/- க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,
அவர்கள் இன்று (03.04.2023) வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கா.
ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உட்பட பலர் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்
TAGS 15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன்ஆதர்ஷினிஜூனியர் பேட்மிட்டன்பேட்மிட்டன்பேட்மிட்டன் ஆதர்ஷினிவிளையாட்டு செய்திகள்வேலூர் மாணவி பேட்மிட்டன் பிரிவில் முதலிடம்வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்
