மருத்துவம்
பாலுடன் நெய் சேர்த்து சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை இருக்கிறதா? தெரிந்து கொள்ளுங்கள்!
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரவு தூங்கும் முன்பு, பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். இந்தியவர்களின் உணவு முறைகளில் பாலும் நெய்யும் இன்றியமையாதவை. ஒரு நாளில் நாம் தயாரிக்கும் உணவு பால் சார்ந்த பொருட்கள் இல்லாமல் இருக்காது. பாலில் இருந்து தயாரிக்கும் இனிப்பு முதல் தயிர், மோர், வெண்ணெய் என எல்லாம் அனைவருக்குமே விருப்பமானதுதான். இன்றைய காலத்தில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக கொழுப்பு இருப்பதாக கருதும் போக்கும் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை என்கிறது மருத்துவ உலகம். பால் பொருட்களில் நல்ல கொழுப்பு மிகுந்துள்ளது. அளவோடு இருந்தால் எல்லாம் நன்மைதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நெய் கலந்த பால் அருந்துவது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இளம் சூடான பாலில், சிறிதளவு நெய் கலந்து இரவு தூங்குவதற்கு முன் அருந்தலாம்.
பாலில் இருக்கும் டிரைப்டோபான் என்ற வேதிப்பொருள் அமினோ அமிலத்தை அடிப்படையாக கொண்டது. இது சரியான தூக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. இன்சோமேனியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நெய் நமது சித்த மருத்துவதிலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் முதன்மையானதாகும். பல மருந்துகள், சூரணங்கள் நெய் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படும். நெய் பல்வேறு வகையான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. நெய் இருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டிருக்கிறது. நெய்யில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு வகையான ஊட்டத்துச்சத்துகள் நிரம்பியுள்ளன. இதில் விட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே அதிகளவு காணப்படுகிறது. நெய்யுடன் பால் சேர்த்து குடிப்பதால் செரிமானத்திற்கு பெரிதளவு உதவியாக இருக்கிறது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உடலின் செரிமான மண்டலம் சீராக இயங்கும். மேலும், வயிற்றின் உட்புற சுவர் புண்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏற்படாமல் நெய் பாதுகாக்கும்.
இது வளர்சிதை மாற்ற அமைப்பின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. உடலுக்குத் தேவையில்லாதா நச்சுத்தன்மையுடைய அமிலங்களை வெளியேற்றுகின்றன.
மூட்டுவலி – எலும்பு வலிக்கு இது சிறந்த தீர்வு. எலும்பு ஆரோக்கியத்திற்கும் பாலுடன் நெய் சேர்த்து குடிப்பது நல்லது. பாலில் உள்ள கால்சியம் நெய்யில் உள்ள ஊட்டச்சத்துகள் உங்கள் மூட்டுவலி பிரச்சனையை இல்லாமல் போய்விடும்.
எப்படியாவது உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. இப்படிச் செய்வதால் உடல் எடையினை அதிகரிக்கும். உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்கள், இந்த நெய் கலந்த பாலினை அருந்துவதன் மூலம் எடை கூடும்.
பாலூட்டும் தாய்மார்கள் நெய் கலந்த பாலை தினமும் எடுத்துக் கொள்வது சிறந்தது.
உடல் ஆரோக்கியத்துடன் இருக்கத்தானே தினமும் இரவில் பால் அருந்துகிறீர்கள், இனி அதனுடன் நெய் சேர்ந்த்துக் கொள்ளுங்கள்.