தலைப்பு செய்திகள்
திருச்சியில் உளறிக்கொட்டி மாமன்றத்தில் பதவியேற்ற மாமன்ற உறுப்பினர்கள்.
திருச்சியில் உளறிக்கொட்டி மாமன்றத்தில் பதவியேற்ற மாமன்ற உறுப்பினர்கள்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள் தாங்கள் பதவி ஏற்கும்போது வழக்காமாக உளமார உறுதி அளிக்கிறேன் என கடவுளின் பெயரால் பதவி ஏற்பார்கள். சிலர் தங்களது தலைவர்களின் பெயரை கூறி பதவி ஏற்பார்கள்.
இன்று திருச்சி மாநகராட்சியில்
65வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு இன்று காலை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
பதவி ஏற்ற உறுப்பினர்கள் தங்கள் சார்ந்த கட்சியின் தலைவர்களை, பதவி வகித்து வரும் அமைச்சர்களின் பெயர்களைக் கூறி உளமார உறுதி கூறுகிறேன் என பதவியேற்றனர்.
அப்போது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 65ஆவது வார்டு உறுப்பினர் அம்பிகாபதி பதவி பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து தன் கையில் எழுதி கொண்டு வந்திருந்த தாளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆசிபெற்ற, அம்மா அம்மாவின் நல்ஆசியுடனும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சின் ஆசி பெற்ற, இணை ஒருங்கிணைப்பாளர்ஈபிஎஸ்ன் ஆசி பெற்ற என கூறிக் கொண்டிருந்த போது
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாநகர ஆணையர் முஜிபூர் ரகுமான் நேரம் கடந்து செல்கிறது எனவே விரைவில் முடிக்குமாறு கூறினார். அதையும் மீறி அம்பிகாபதி
மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜனின் ஆசி மற்ற மாவட்ட செயலாளர்களின் பெயர்களை தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார் அதிமுக கட்சித் தலைவர்களின் பெயர்களை கூறி மீண்டும் கூறிக் கொண்டிருந்தபோது இதனை கண்ட ஆணையர் மூலமாக உரிமை குறித்து என்று சொல்லி முடிக்கும் படி கேட்டுக்கொண்டார் இதனைத்தொடர்ந்து அம்பிகாபதி தனது உறுதிமொழியை முடித்துக் கொண்டார்.
இதேபோல் இன்று பதவி ஏற்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களின் பெயரை கூறி தடுமாறி பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.