தலைப்பு செய்திகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இணைப்பிற்கு அச்சாரம் போட்ட தேனி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது பண்ணை வீட்டில் இன்று நடைபெற்ற கழக நிர்வாகிகளுடன் உண்டான ஆலோசனை கூட்டத்தில் கழக தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க தேனி மாவட்டத்தின் ஒட்டுமொத்த குரலாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர தேர்தல்களில் அதிமுக தோல்வியைத் தழுவி வந்ததை மையப்படுத்தியும், இனி வரும் காலங்களில் எந்த ஒரு கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று கூறி வரும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மத்தியில் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை தங்களுடன் இணைத்து கழகப் பணி ஆற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த குரலாக இன்று தேனி மாவட்டத்தின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது.
இந்நிலையில் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களுடன் இணைந்து பணியாற்றவே விருப்பம் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கடைக்கோடி தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் இணைப்பு நடைபெறும் என தேனி மாவட்டகழக நிர்வாகிகள் கூட்டாக அறிவிப்பு..