சினிமா
புதிய கெட்டப்பில் குடும்பத்தினருடன் அஜித்குமார். இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்.
நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சமூக வலைதளங்களில் கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இருந்தாலும், நான்கு தினங்களில் வலிமை திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த பட்டியலில் இணைந்தது. தொடர்ந்து மூன்று தினங்களுக்கு திரையரங்கில் கூட்டம் நிரம்பிவழிந்தது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம், வியக்க வைக்கும் பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்டிருந்தது. வலிமை திரைப்படம் நினைத்ததைவிட நீண்ட காலம் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலுக்கு உள்ளானது. அதானல், அதே கூட்டணியைவைத்து விரைவில் ஒரு படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘ஏகே61’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியது.
இந்தப் படத்துக்காக அவர் 20 கிலோ வரையில் குறைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்துவருகின்றன. இந்தநிலையில், தாடியை நீளமாக வைத்துக் கொண்டுள்ள புதிய கெட்டப்பில் அஜித் குமார் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. நெட்டீசன்கள் அந்த புகைப்படத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.