தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி.
தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டிடம் இருந்தாலும் கோஷ்டி பூசலால் மரத்தடியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம் கூட்டத்திற்கு பின்னர் சிவகங்கை எம்பி கார்த்திக்சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, திமுக கூட்டணி பலமான கூட்டணி, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் .
ஆனால் மாற்று அணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை ஆனால் அரசியல் பார்வையோடு பார்த்தால் அதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ளது அவர்களுக்கு வாக்கு வங்கி உள்ளதால் எங்களுக்கு பலவீனம் என்று அர்த்தம் கிடையாது திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது வருங்காலத்திலும் முழுமையாக வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார், மேலும் அதிமுக ஒற்றைத் தலைமையில் நடக்கும் போல் உள்ளது.
அதிமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு மாநகராட்சி நகராட்சிகளில் தனிப்பெரும்பான்மை கிடையாது, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் மேயராகவோ தலைவராகவோ வர வேண்டும் என்றால் அங்கு பெரும்பான்மை இருக்கின்ற திமுக ஆதரவுடன் தான் வரவேண்டும்,
அந்தக் கட்சியை சார்ந்துள்ளவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருப்பது வாடிக்கைதான், அதை எல்லாம் சமாதானப் படுத்த வேண்டிய இடத்தில் திமுக தலைமை உள்ளது என்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் இன்றைக்கு இருக்கும் கட்சி நிலைமையில் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திப்பது சாதுர்யமானது என்றும் தமிழ்நாட்டில் எந்த பெரிய சிறிய கட்சியாக இருந்தாலும் கூட்டணியின் மூலமாகத்தான் தேர்தலை சந்திப்பது அரசியல் சாதுரியம் என்றும் உக்ரேனில் படித்த மருத்துவ மாணவர்களை மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு அவர்களை அனுப்புவதற்கு ராஜாங்க ரீதியில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் இதற்கு இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், இக்கூட்டத்தில் மாநகரத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.