தலைப்பு செய்திகள்
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்.
அமைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவருக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மேயராக ரிப்பன் மாளிகையில் பிரியா ராஜன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மேயர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று திமுக அறிவித்தது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்று மேயராக பதவி ஏற்றுக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் மேயர் தேர்தல் இன்று அந்தந்த மாநிலங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 மாநகராட்சிகளில் திமுக போட்டியிடுகிறது. ஒரே ஒரு மாணவன் மட்டும் கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மேயர் இருக்கை அலங்கரிக்கப் போவது யார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் 323 ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் முதல் முறையாக பட்டின சமூகத்தை சேர்ந்த 28 வயதான பிரியா ராஜன் மேயராக பதவி ஏற்றுக் கொண்டார்.
சென்னை மாநகர மேயருக்கு அங்கியையும் தங்க சங்கிலியை சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினர். மேயராக பதவி ஏற்றுக்கொண்ட பிரியா ராஜனுக்கு சிவப்பு நிற அங்கியை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார். சிவப்பு நிற அங்கி அணிந்து சென்னை மேயர் பிரியா மாமன்ற கூடத்திற்கு நுழைந்தார். இதையடுத்து அவரை மேயருக்கான நாற்காலியில் அமர வைத்தனர். அமைச்சர் சேகர் பாபு, மா.சு என இரு அமைச்சர்களும் மேயர் பிரியா ராஜனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். அது போல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் பூங்கொத்து கொடுத்து பிரியா ராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.