BREAKING NEWS

மயிலாடுதுறையில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில்  மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.நேற்று இரண்டாம் நாள் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.லீக் சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலர் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணியினருக்கு முதல் பரிசாக 30000, இரண்டாம் பரிசாக 20000, மூன்றாம் பரிசாக 15,000, நான்காம் பரிசாக 10,000 ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS