BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி முழுமையான நேரடி விசாரணை நடத்தப்படும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் முழுமையான நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் , புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வழக்குகள் பல நிலுவையில் இருந்ததால் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் காணொலி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு முறையில் முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி வருகிற மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கள் முதல் (மார்ச் 7) முழுமையான நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தனபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கலப்பு முறையில் வழக்குகளை விசாரிக்கும் போது சிக்கல்கள் ஏற்பட்டதாக சக நீதிபதிகள் தெரிவித்ததன் அடிப்படையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி காணொலி காட்சி வாயிலாக விசாரணை நடத்த தற்போது தடை விதித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த காணொலி விசாரணை நிறுத்தப்பட்டு , நேரடி விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )