ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சியம்மன் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரை அருகில் சம்போடை வனத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் ஸ்ரீ சித்த நாதர் சுவாமிக்கு 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழாவை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் ,கணபதிஹோம்ம் மற்றும் திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், ஸ்ரீ பச்சையம்மன் ஸ்ரீ சித்தநாத ஈஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் செய்து கோவில் வளாகத்தில் அக்னி ஆவாஹண ஹோமம் நடைபெற்று முடிந்த நிலையில் கன்னிப் பெண்களுக்கான சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் கோவில் பூசாரி தீர்த்த குடங்களுடன் மேளதாளம் முழுக்க வானவேடிக்கையுடன் சக்தி அழைத்து நிகழ்ச்சி நடைபெற்று பின்னர் அக்னி குண்டத்திற்க்கான பூஜைகள் செய்யப்பட்டு தீக்குண்டத்தில் கோவில் பூசாரி அக்னி சட்டி உடன் ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கிய பின்னர் ஏராளமான பக்தர்கள் ஒவ்வொருவராக அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் சுவாமிக்கு மகா தீபாரணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .