சினிமா
ஓடிடியில் வெளியானது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடித்துள்ளார்கள். விஷால் நடித்து தயாரித்த இப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
வீரமே வாகை சூடும்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 1 மாதம் ஆவதால் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
CATEGORIES Uncategorized
