மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி வழியாக வரணாசிக்கு செல்லும் 9 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்தினை ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

கிருஷ்ணகிரி வழியாக வரணாசிக்கு செல்லும் 9 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்தினை ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பத்மநாபசுவாமி திருக்கோவில் இருந்து
9 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் பாதையாத்திரை மூலமாக வாரணாசியில் உள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது,
இதற்காக கடந்த 1-ம் தேதி ரமேஷ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த சிவலிங்க யாத்திரையானது
மதுரை, திண்டுகல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தது.

முன்னதாக மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டிக்கு வந்த சிவலிங்கத்திற்கு பக்தகோடி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர், பின்னர் கிருஷ்ணகிரி பேருந்துநிலையம் அருகில் பக்தர்களின் சரிசனத்திற்காக நிறுத்தப்பட்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் வழிப்பட்டன.

பின்னர் மக்களின் தரிசனத்திற்கு பிறகு கிருஷ்ணகிரியில் இருந்து புறப்பட்ட சிவலிங்கம் ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களை கடந்து சுமார் 9500 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு வருகின்ற 17.4 – 2022 அன்று வாரணாசி சிவன் கோவில் சென்று அடைய உள்ளது.,
சுமார் 48 நாள்கள் பாதயாத்திரை மூலம் பயணம் மேற்கொண்ட இந்த சிவவலிங்கம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
சாலைவழியாக செல்லும் இந்த சிவலிங்கத்திற்கு மக்கள் சாலையோரம் நின்று தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
