BREAKING NEWS

சினிமா

பிளாட்பார்மில் படுத்துறங்கும் தளபதி விஜய்யின் தந்தை: தீயாக பரவும் வீடியோ.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் மிக முக்கியமானவர் எஸ்ஏ சந்திரசேகர். எக்கச்சக்கமான திரைப்படங்களை இயக்கிய இவர்தான் தளபதி விஜய்யின் தற்போதைய அசுர வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவர். இவர் தற்போது ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்து, ஏற்கனவே அந்த சேனலில் புரோமோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார். இந்நிலையில், தன் வாழ்க்கை வரலாற்றின் முதல் எபிசோடை ’பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.

தி.நகருக்கு காரில் வந்திறங்கி பாய் மற்றும் தலையணையை எடுத்துக் கொண்டு வந்து பிளாட்ஃபார்மில் அமரும் எஸ்.ஏ.சி. தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பேசுகிறார் தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தன்னுடைய சென்னை வாழ்க்கையை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். நாயுடு ஹால் முன்பு சுமார் 47 நாட்கள் இருந்ததாகவும், வீதிகளிலேயே படுத்துறங்கியதாகவும் கூறியுள்ளார்.

மழை வரும்போதெல்லாம் அருகில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்குள் சென்று அமர்ந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், பழைய நினைவுகளை எப்போதும் மறப்பதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தான் படுத்துறங்கிய இடத்துக்கு வந்து உறங்கிச் செல்வதை இன்றும் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரவு 11 மணிக்கு மேல் அங்கு வரும் எஸ்.ஏ.சி அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்றுவிடுவேன் எனவும், பிளாட்ஃபார்ம் வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இனிவரும் எபிசோடுகளில் இதைவிட பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )