தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில், பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், பாப்பான்குளம், மடத்துக்குளம், காரத்தொழுவு, போன்ற பல்வேறு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில், பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொங்கல் திருநாள் முடிந்த போதிலும், வருடந்தோறும் பூசணிக்காயை சாகுபடி செய்து அருகில் உள்ள கணியூர் கமிஷன் கடை மற்றும் மடத்துக்குளம் வாரச்சந்தை போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளுக்ககொண்டு சென்று, குறைந்த விலையில் அதிக சத்துள்ள பூசணிக் காய்களை விற்பனை செய்து, விற்பனையாளர்களும் அதனை வாங்குபவர்களும், ஒரே நேரத்தில் பயன் பெற்று வருகின்றனர். கோடை வெயிலுக்கு தினந்தோரும் அன்றாட காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துள்ள உணவாக பூசணிக்காய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
