BREAKING NEWS

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாற்று கட்சியினர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சியிலிருந்து கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.விநாயகம் தலைமையில் 150 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக அமைப்புச் செயலாளர், அரக்கோணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.அரி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர், கட்சியில் இணைந்த அனைவருக்கும் கட்சியின் கரைவேட்டி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்,

மேலும் இதே நிகழ்வில் பாமக கட்சியில் இருந்து செருக்கனூர் கிளைச் செயலாளர் நித்தியானந்தம் தலைமையில் பாமகவினர் இந்த கட்சியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர், இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் இளம் பார்த்திபன் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அனைவரும் இணைந்தனர், இவர்களுக்கும் கழகத்தின் அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்று கட்சியில் இணைந்தமைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் என்று கூறி வாழ்த்தினார் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட ஆவின் தலைவர் கவிச்சந்திரன், மாவட்ட கழகத் துணைச் செயலாளரும், திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய சேகர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

 

CATEGORIES
TAGS