மணப்பாறை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள குமாரவாடி இருந்து ஆனாங்கரைப்பட்டி வழி இளங்காகுறிச்சி செல்லும் தார் சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் தற்போது வரை அந்த சாலையை சீரமைக்கும் பணியை முடிக்காத காரணத்தினால் அந்த வழியாக செல்லும் அரசு பேருந்து குமாரவாடியில் இருந்து நேராக வையம்பட்டி செல்கிறது இதன் காரணமாக ஆனாங்கரைப்பட்டியில் இருந்து இளங்காகுறிச்சி செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து வராத காரணத்தினால் சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து செல்வதாக கூறி குமாரவாடியில் இருந்து இளங்காகுறிச்சி செல்லும் தார் சாலை பணியினை உடனடியாக பணியை நிறைவு செய்து அந்த வழியாக அரசு பேருந்து செல்ல வழிசெய்ய வேண்டும் என்று கூறி குமாரவாடியில் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் ஈடுபட்டனர்.
இந்த சிறைபிடிப்பு போராட்டத்தைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்மந்த இடத்திற்கு சென்று பள்ளி மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் இதைப் பற்றி கூறி உடனடியாக சாலையை சரி செய்து இந்த வழியாக உங்களுக்கு அரசு பேருந்து செல்லும் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.