செம்பனார் கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்தும் அதிகரித்து வரும் வேலையின்மையை கண்டித்தும் ஒன்றிய பிஜேபி அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக செம்பனார்கோவில் கடைவீதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து முழக்கமிட்டபடி ஸ்டேட் வங்கி ஊர்வலமாக வந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் வங்கி உள்ளே நுழைய முற்பட்டபோது போலீஸாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 35 பெண்கள் உட்பட 110 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.