BREAKING NEWS

மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.

மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.

சட்டவிரோதமாக அரசின் சொந்தமான சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையி்ல் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்கும் இடத்தில் அகற்றப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட லோடு மண் முறைகேடாக தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது தொடர்பாக பலமுறை புகார் அளித்த பிறகும் எவ்வித முறையான நடவடிக்கை எடுக்காமல் திருட்டுக்கு துணையாக இருந்து வருபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு மண் எடுக்கப்பட்டதற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டுவது சம்பந்தமாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் தா. கிருஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களை நேரடியாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்தார்.

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலம், 8 வது வார்டுக்கு பழனிச்சாமி நகர் உட்பட்ட பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இப்பணியின் போது ரோடு அமையும் இடத்தில் 3 அடி ஆழம் வரை மண் மற்றும் பழைய சாலை ஆகியன இடித்து அகற்றப்பட்டு எடுத்து தனியார் இடத்தில் மொத்த சேமித்து வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சாலை அமைக்க அகற்றப்பட்ட 100 க்கும் மேற்பட்ட லோடு மண் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணை ஒரு தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்த போது, மண் லோடு கொண்டு செல்லப்பட்டது உண்மை என்று தெரிவித்தனர். ஆனால் சட்டவிரோதமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சாலையில் எடுக்கப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்றவர் பெயர் விபரங்கள் முழுமையாக தெரிந்த பிறகும் எவ்வித முறையான நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருவது பல்வேறு வகையான சந்தேங்களை எழுப்பியுள்ளது.இது குறித்து பத்திரிகையாளர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது மண்டல அலுவலரிடம் கேட்டபோது சாலை அமைக்கம் பணிக்கு அகற்றிய மண் தனியார் இடத்தில் மொத்த சேமித்து வைக்கப்பட்டிருந்தது அதை குப்பை நிரப்பும் பாறைக்குழியில் அதைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் திடீரென தனியார் இடத்தில் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை தனியார் நிறுவனம் எடுத்துள்ளனர் என்றும் அதற்கு மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை கட்டும் திட்டத்துக்கு நமக்கு நாமே திட்டத்தில் 1.5 லட்சம் ரூபாய் பங்களிப்பாக சட்டவிரோதமாக மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் கொடுத்துள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசி்ற்கு சொந்தமான மண்ணை எடுத்து சென்றது சட்டப்படி குற்றமாகும் குறிப்பாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை விற்பணை செய்வதாக இருந்தால் இது தொட‌ர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வெளிப்படையாக தீர்மானம் வைத்து நிறைவேற்றி வெளிப்படையாக ஏலம் விட வேண்டும் என்பது தான் விதியில் உள்ளது என்பது தாங்கள் அறிந்ததே.

எனவே சட்டவிரோதமாக அரசின் சொந்தமான சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையி்ல் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS