தலைப்பு செய்திகள்
நாகர்கோவில் அடுத்த பறக்கை மெயின் ரோட்டில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் எம்.எம்.பி தெருவுக்கு செல்லும் பொதுமக்கள் அவதி.

நாகர்கோவில் அடுத்த பறக்கை மெயின் ரோட்டில் தேங்கி இருக்கும் கழிவுநீரால் எம்.எம்.பி தெருவுக்கு செல்லும் பொதுமக்கள் அவதி-எம்.எம்.பி தெருவுக்குள் பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி குழந்தைகள் தினசரி தேங்கிய சகதியில் கீழே விழுவதும்,சாக்கடையில் மிதித்து பள்ளிக்கு செல்வதும் தினசரி நிகழ்ந்து வருகிறது-இதனால் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை 1வது வார்டு எம்.எம்.பி தெருவுக்குள் சாக்கடை கழிவுகள் புகுவதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் பறக்கை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் இதனால் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர், பறக்கை மெயின் ரோடு சாலை வழியாக சாக்கடை குழாய்கள் செல்கின்றன, ஆனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் விரிவுபடுத்தும் காரணத்தினால் ஓடை வழியாக சாக்கடைகள் செல்ல முடியாமல் சாலையில் கழிவு நீர் வெளியேறி தெருவுக்குள் புகுவதால் சாக்கடை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறதுஇதனால் அப்பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்,மேலும் இந்த எம்எம்.பி தெருவில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர் அவர்கள் தினமும் அந்த வழியாகத்தான் பள்ளிக்கு சென்று வர வேண்டியிருக்கிறது,சாக்கடை கழிவுகளால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், யூனிபார்ம் முழுவதும் சாக்கடைக் கழிவுடன் பள்ளிக்கு செல்வதும் தினசரி நிகழ்வாக நடந்து வருகிறது,மேலும் வயதான பெரியவர்கள் குழந்தைகள் என இந்த கழிவுநீரால் நோய் தொற்றாலும்,கீழே வழுக்கி விழுநீதும் பாதிக்கப்படுகின்றனர்,எனவே உடனடியாக சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கேள்வி கேட்டுக் கொண்டுள்ளனர், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
