BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்களை திருடியவர் கைது.

 

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்களை திருடியவர் கைது.

சந்தோஷ்குமார் என்பவர், 3 கலசங்களையும் கொள்ளையடித்து சென்று தனது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி வைத்திருந்ததும் தெரியவந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்களை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. 20 ஆண்டு்களுக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோபுரங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 3 புதிய கலசங்கள் அமைக்கப்பட்டன.

இதில் 300 கிராம் தங்க முலாம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1-ந் தேதி நள்ளிரவு விருத்தாம்பிகை அம்மன் கருவறை கோபுரத்தில் இருந்த 3 கலசங்களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகம் முடிந்த 22-ம் நாளில் கலசங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வசந்தி கணேசன் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார் தனிப்படை அமைத்தார் இதனடிப்படையில் விருத்தாசலம் டிஎஸ்பி அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )