கரூரில் மாநகராட்சி ஆணையரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணா போராட்டம்
கரூர் மாநகராட்சி பகுதியில் ஆணையாளரை கண்டித்து அலுவலக உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் மாநகராட்சி ஆணையாளர் சுதா தற்போது பணியாற்றி வருகிறார் .
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ராஜசேகரி என்ற உதவியாளரை
ஓருமையில் பேசியதாகவும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மேலும் அலுவலகத்தில் பணிபுரியும்
அலுவலர்களை ஒருமையில் பேசுவது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.
மேலும் கூறுகையில் தற்போது பணியாற்றி வரும் அலுவலக உதவியாளர்கள் மாநகராட்சி ஆணையர் சுதா இங்கு பணியாற்றி வந்தால் ஊழியர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக எச்சரித்தனர்.
கரூர் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் தற்சமயம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.https://youtu.be/wBrKBbiEZjo