ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.
ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத்ததின் கீழ் 9 பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஏற்காடு டவுன் பஞ்சாயத்து உட்பட்ட அலுவலகத்தில் துணை ஆட்சியர் அலமேல்மங்கை. மற்றும் கூடுதல் இயக்குனர் தமிழரசி ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆவணங்களை சரி பார்க்கும் போது அதில் இருந்து சுமார் பல லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டு அதற்கு சரிவர ஆவணங்கள் வைக்கப்படவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில் உடனடியாக பஞ்சாயத்து செயலாளர் ராமரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
மேலும் சம்பவத்தை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் ராமருக்கு திடிர் நெஞ்சு வலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஏற்காட்டில் சமூக வலைதளங்களில் ஏற்காடு டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் 77 லட்ச ரூபாய் மோசடி என்று பரவி வருகிறது.
மேலும் இதில் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடந்தையா என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.https://youtu.be/A6nQ7ZBzObI