இன்றைய (21-02-2024) ராசி பலன்கள்
மேஷம்
இழுபறியாக இருந்துவந்த பணிகள் முடிவுக்கு வரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அஸ்வினி : அலைச்சல் ஏற்படும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறதி குறையும் நாள்.
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : ஆதரவு ஏற்படும்.
மிருகசீரிஷம் : மந்தத்தன்மை குறையும்.
மிதுனம்
நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
பூசம் : பொறுப்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : சஞ்சலமான நாள்.
சிம்மம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உதவி நிறைந்த நாள்.
மகம் : அலைச்சல் ஏற்படும்.
பூரம் : கட்டுப்பாடு வேண்டும்.
உத்திரம் : பொறுமை வேண்டிய நாள்.
கன்னி
எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
உத்திரம் : மனவலிமை உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
துலாம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனை மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.
சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.
விசாகம் : சோர்வுகள் நீங்கும்.
அனுஷம் : மதிப்பு மேம்படும்.
கேட்டை : அதிர்ஷ்டகரமான நாள்.
தனுசு
வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். மாற்றம் நிறைந்த நாள்.
மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திராடம் : சேமிப்பு குறையும்.
மகரம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் கைகூடும்.
அவிட்டம் : அறிமுகம் உண்டாகும்.
கும்பம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். திடீர் தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உடன் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
சதயம் : லாபம் உண்டாகும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.
மீனம்
எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
பூரட்டாதி : ஈடுபாடு ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.