5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா.
ஓமலூரில் 1000 திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது…
ஓமலூரில் அமைந்துள்ள 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரபங்கா மஹரிஷி ஜீவ சமாதி அடைந்த கோட்டை
அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சந்தைபேட்டை காசிவிஸ்வநாதர் கோயிலில் இருந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரியுடன் புறப்பட்டு,ஊர்வலமாககோவிலுக்கு சென்றனர்.
இதில் மேளதாளங்கள் முழங்க குதிரைகள் மற்றும் காளை மாட்டுடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தீர்த்தகுட ஊர்வலமானது வெகு விமர்சையாக கோவிலை சென்றடைந்தது.
பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை கும்பாபிஷேக தினத்தன்று கோபுர விமானங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
மேலும்,பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.