மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் மலைப்பகுதிகளுக்கான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான விரிவாக்க துவக்க விழா இன்று உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கி வைத்தனர்.
உதகையில் 11 மகளிருக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 99 பேருந்துகள் மகளிருக்காக இயக்கப்படுகிறது. மேலும் 16 புதிய பேருந்துகளையும் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேலும் 10 ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் அரசு பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்கிய ஓட்டுநர்களுக்கு வெள்ளி பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மகளிருக்கான மலைப்பகுதியில் இலவச விரிவாக்க திட்டம் எங்கு தொடங்கலாம் என முதலமைச்சர் கேட்ட போது நீலகிரியில் துவக்கலாம் என்று சொன்னவுடனே அதற்கு ஒப்பதல் அளித்தார் என்றால் அவர் நீலகிரி மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பு தான் என்றார்.
நிதிநிலை அறிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த நிதிநிலை அறிக்கை என்றும், முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 8.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது தமிழக முதலமைச்சரின் சாதனை என்றார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசுகையில் மகளிருக்கான 11 பேருந்துகள் இயக்கப்பட்டு கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. மாநில திட்டக்குழு ஆய்வில் மகளிருக்கான இலவச பயணததால் அந்த கட்டணத்தை வைத்து பல்வேறு அத்தியாவிஷய பொருட்களுக்கும், மருத்துவ செலவிற்கு உபயோகமான உள்ளதாக பெண்கள் தெரிவித்துள்ளனர் என்பது திமுக அரசின் சாதனை என்றார்.
மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகமாக கூக்கிராமங்கள் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும், இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பேருந்து ஓட்டுநர்கள் தான் என்றார்.
நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சர் போக்குவரத்து துறைக்கு 3500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். அதே போல் டீசல் மானியத்திற்க்கும் நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். போக்குவரத்து ஊழியர்களுக்கு சீனியர், ஜீனியர் என்ற முறையில் ஊதியம் வழங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார். இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் வரும் காலங்களில் அனைத்தும் புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.