BREAKING NEWS

தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக  உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ்.

அங்குள்ள தனியார் தொழிற்சாலை, ஊராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறையிடம் திட்ட தொழில்நுட்ப அனுமதி வரைபட ஒப்புதல் பெறாமல் இருந்து வருவதாகவும், ஊராட்சிக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வரி வருவாயும் செலுத்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அந்த தொழிற்சாலைக்கு அறிவிப்பாணை செய்தும், வரியும் செலுத்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே. ரமேஷ் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி சின்ன முனியாண்டி என்பவரிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதாக மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து மப்பேடு காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,

அவரது இல்லத்தில் இருந்து அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 12 மணி நேரத்திற்கு பின், திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பவித்ரா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பரிசோதனை செய்த பின், காவல் துறையினருடன் ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நிறுவனம் தரப்பில் புகார் அளிப்பதற்கு முன்பே, தம்முடைய தரப்பில் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், பொய் புகாரில் கைது செய்யப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனிடையே 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல நடுவர் உத்தரவிட்டதையடுத்து,

பலத்த காவல் துறை பாதுகாப்போடு சென்னை புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

CATEGORIES
TAGS