அகரமாங்குடி மாதா கோவில் தெரு கல்லறை சாலையை சீரமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கமணி சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு அலுவலக செலவீனங்களுக்கு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் செல்வபாரதி கண்ணன், பேசும் போது அகரமாங்குடி ஊராட்சி, மாதா கோயில் தெருவாசிகள் பயன்படுத்தி வரும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருவதாகவும், அதே கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தும் கல்லறை சாலையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தார் இதற்கு பதில் அளித்த ஒன்றியக்குழு தலைவர் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் விரைவில் அங்கு செயல்படுத்த உள்ளதாகவும். அதன் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் அதோடு கல்லறை சாலை வரும் மாதங்களில் சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் முடிந்தது.