குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருக்க கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதன்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கனிமொழி எம்பி முறையிட்டு அந்த துறையினுடைய அமைச்சரை ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு குரல் கொடுத்தார். அந்த வகையில் விளம்பரத்தை போட வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்தது வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக போடப்பட்டது விளம்பரம் தயார் செய்தவர் தவறு செய்துள்ளார். அதை நாங்கள் கவனிக்கவில்லை எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.இந்தியாவில் ஜாதி மத மோதல்கள் இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள் விளம்பரத்தில் சின்ன தவறு நடைபெற்றுள்ளது என்றார்.எந்த அரசியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த அரசு நிகழ்ச்சியில் அந்த திட்டத்தை பற்றி சொல்ல வேண்டும், திட்டத்தின் பயனைப் பற்றி சொல்வார்கள் ஆனால் அரசு விழாவில் இன்றைக்கு அரசியல் பிரச்சாரம் பாரத பிரதமர் பேசியுள்ளார்.நம்மளுடைய பாரத பிரதமர பற்றி நாம் சொல்வது வெட்கமாக உள்ளது. அடிப்படை புரியாமல் செய்துவிட்டார்.இந்தியா கூட்டணி பாராளுமன்றத்தை கைப்பற்ற போவது உறுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பு யார் பிரதமர் என்பதை அவர்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்றார்