சங்ககிரி நகர் பகுதியில் அதிமுக சார்பில் கண்டா வரச் சொல்லுங்க என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர புது புது யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுகவினர் இணையதள பிரிவு கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் சங்ககிரி பகுதியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்ற தலைப்பில், மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த மக்களை மறந்து ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் திமுக எம்பியை வரச் சொல்லுங்க என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளனர். சங்ககிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES சேலம்
TAGS கண்டா வரச் சொல்லுங்கசேலம்சேலம் மாவட்டம்தமிழ்நாடுபோஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்புமாவட்ட செய்திகள்