BREAKING NEWS

தஞ்சையில் போலியோ சொட்டு மருந்து முகாமில் தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

மாநிலம் முழுவதும் இன்று 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பல்வேறு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தனது மனைவி மற்றும் நான்கு வயது மகள் ஆன் உடன் வந்தார்.

முதலில் தனது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

தஞ்சை மாவட்டத்தில் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் மொத்தம் 1510 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது

இப்பணியில் 6210 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 186 மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள். துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள். அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரு லட்சத்து. 59 ஆயிரத்து, 716 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Share this…

CATEGORIES
TAGS