BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அழகான பிஞ்சுகளை கொல்ல எப்படி மனசு வந்துச்சுன்னு தெரியல?; மத்தூர் பெண் செய்த செயலால் அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும், காயத்ரிக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு தனிஷ்கா (வயது 7) என்ற மகளும், தர்மன்( வயது 4) என்ற மகனும் இருந்தனர். வெங்கடேசன் திருப்பதி திருமலையில் பொம்மை மற்றும் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். பெரும்பாலான நாட்கள் அவர் அங்கேயே தங்கி வியாபரம் செய்துவிட்டு அவ்வபோது வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வெங்கடேசனின் தாய் உதயசந்திரா ( வயது 75) மருமகள் காயத்ரியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் காயத்திரி குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் மாடியில் உள்ள அறையில் தூங்கச்செல்வதாக கூறிவிட்டு குழந்தைகளை அழைத்துச்சென்றுள்ளார்.

சாப்பாடு போட்டது குத்தமா போச்சு. ஆட்டோ ஓட்டுனருடன் ஊரை சுற்றும் குரங்கு!
மாடிக்கு சென்ற காயத்ரி மற்றும் குழந்தைகள் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் சந்தேகமடைந்த மாமியார், மேலே சென்று பார்த்த போது மாடியில் குழந்தைகள் மற்றும் காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் மத்தூருக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த காயத்ரி தனது இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்த பிரச்சனைக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )