BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

”பாலியல் துன்புறுத்தலை மூடி மறைத்தாலும் போக்சோ பாயும்” – தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறுவது என்ன?

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர் சங்கம் தாம்பரம் கிளை, காஞ்சிபும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்திடவேண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் முன்னிலையில் தாம்பரம் காவல் ஆணையாளர் மு.ரவி பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையில் இருந்து தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் வளாகம் வரையில் 3 கி.மீ தூரம் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக பேசிய தாம்பரம் காவல் ஆணையாளர் மு.ரவி:-

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக சிறு குற்றம் கூட நடைபெற கூடாது என்பதை முன்வைத்து தான் தமிழக காவல் துறை செயல்படுகிறது.

அதற்காக பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் நடமாடும் இடங்களில் பெண் காவலர்கள் ரோந்துகள் சுற்றவும், சிறப்பு உளவு பிரிவு மூலமாக கண்காணித்து பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை காவல் துறையினர் தடுத்து வருகிறார்கள்.

அதுபோல மருத்துவமனையில் பெண் நோயாளியை ஆண் மருத்துவர் பரிசோதித்தாலும், சி்கிச்சை அளிக்கும் போது பெண் செவிலியரோ, அல்லது உறவினரோ உடன் இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி கூடங்களில் சிசிடிவி பெருத்தப்பட்டு பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர் பயிற்சி அளிக்கும் போது பெண் உதவியாளர் உடன் இருக்க வேண்டும் என்பதனை அனுமதி கொடுக்கும்போதே கட்டாயமாக வலியுறுத்தியுள்ளோம்.

அதனை மீறுபவர்கள் மீதும், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமையை ஈடுபடுபவர்கள், அதனை மறைக்க முயல்பவர்கள் மீதும், கடுமையாக போச்சோ சட்டம் பாயும் என தாம்பரம் காவல் ஆணையாளர் மு.ரவி எச்சரித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )