சீர்காழி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வேகத்தடைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்றது..
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தளபதி விஜய் அறிவுறுத்தலின் பேரில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலோடு சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானம் அருகில் வாகன ஓட்டிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த வேகத்தடையை வண்ணம் பூச வேண்டி பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
அந்தச் செய்தியை அறிந்த தமிழக வெற்றிக் கழகம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டிகோபி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொண்டரணி தலைவர் தினேஷ்,மாவட்ட துணை செயலாளர் தீபன்,பொறுப்பாளர் ராகுல்,சீர்காழி ஒன்றிய தலைவர் கமல், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் ரவி, சீர்காழி ஒன்றிய செயலாளர் மகேஷ்,நகர பொருளாளர் அபி,சீர்காழி ஒன்றிய மாணவரணி செயலாளர் அன்பு செங்கமேடுமணி,ஆகியோர் ஒன்றிணைந்து வேகத்தடைக்கு வெள்ளை வண்ணம் பூசினர் இதில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.