தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நல உரிமை மீட்பு மாநாடு அந்த அமைப்பின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது .
கருரில் இனாம் நில விவசாயிகள் வீட்டு மனை உரிமையாளர்கள் மற்றும் குத்தகையாளர்கள் இயக்கம் சார்பில் நில உரிமை மீட்பு மாநாடு கரூர் கோவை ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலைத்துறையும் வகுப்பு வாரியமும் சட்டவிரோதமாக அபகரிக்கும் முயற்சியை உடைத்து பல தலைமுறை தலைமுறையாய் அனுபவத்தில் உள்ள குத்தகைதாரர்களுக்கு நிலத்தை வழங்கிட வேண்டும்
மேலும் கர்நாடகா ஆந்திரா போல தமிழக அரசு உழவர்கள் வீடு மனை நில உரிமையாளர்களுக்காக இனம் ஒழிப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்திட வேண்டும் இந்து சமய அறநிலைத்துறையும் வகுப்புவாரிவும் அப்பாவி விவசாயிகளை புதிதாக கட்டாய குத்தகைதாரர்களாக மாற்றும் முன்னெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் மேலும் 2025 முதல் கடந்த சில வருடங்களில் கட்டாய குத்தையாகப்பட்ட நிலங்களை குத்தகையை ரத்து இது நில உரிமை அளிக்க வேண்டும்
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை வெண்ணைமலை கோவிலுக்கு 52 ஏக்கர் மட்டுமே நிலம் இருக்கிறது என்று பதிவு செய்துவிட்டு தற்போது 3000 ஏக்கர் மேற்பட்ட நிலங்கள் உள்ளன என்று தவறாக 60க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் வழக்குகளை தாக்கல் செய்தும் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு
ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அழைப்பானை அனுப்பி சட்டவிரோதமாக விசாரித்து வரும் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் வரும் இந்து சமய அறநிலை துறையின் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் மீது எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை மாநாட்டு தீர்மானங்களாக நிறைவேற்றினர்
இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் இனாம் நிலை உரிமையாளர்கள் குத்தகைதாரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறுகையில்..
இந்த இனாம் விவசாயிகள் வீடு மனை உரிமையாளர்கள் அவர்களின் நிலங்களை தவறான அதிகாரிகளால் அரசு வழிநடத்தப்படுகிறது என குற்றம் சாட்டினார். அவ்வாறு தவறான தகவல்களை அளித்து வரும் அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து நியாயமான நேர்மையான அதிகாரிகளை அந்தப் பதவிகளுக்கு அமர்ந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.