ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
தரங்கம்பாடி அருகே மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த கட்டிடத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்றி வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கி வைத்தார். மேலும் இன் நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர் எம்’அப்துல் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.