வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் …
வைகை அணையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டும் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்டம் 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையில் தனிநபர் ஒருவர் மீன் பிடிக்கும் உரிமம் பெற்றுள்ளார்.
மீன் வளர்ப்பிற்காக இறைச்சி கழிவுகளை மீன் பிடிக்கும் குத்தகைதாரர்கள் அணையில் கொட்டி வருதாகவும், இதனால் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.எனவே மீன்படி உரிமத்தை ரத்து செய்ய கோரியும் மீன்பிடி உரிமத்தை அணையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறியும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகை அணை மீனவர்கள் விவசாயிகள் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.