BREAKING NEWS

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய கட்சியின் தலைவர் ராஜமோகன் யாதவ் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 81% ஓ பி சி மக்கள் உள்ளனர் .
மேலும் இவர்களையும் தலித் அமைப்புகளையும் இணைத்து இந்த கட்சி எம்பி பொது தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்த ஓ பி சி மக்களின் உரிமைகளை இந்திய அரசியல் சட்ட ரீதியாக இதுவரை பிஜேபி அரசு மற்றும் இதரக் கட்சிகள் எதுவும் பெற்று தரவில்லை. எனவே அனைத்து கட்சிகளும் ஓபிசிக்கு அனைத்து உரிமைகளையும் பெற்று தந்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை இவர்கள் எவரும் பெற்று தரவில்லை என்பதால் 40 தொகுதிகளில் தமிழகத்தில் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் என தீர்மானம் இயற்றியதாக கூறினார்.

CATEGORIES
TAGS