ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி மூன்றாம் மண்டலத்தில் அமைந்திருக்கும் திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் நடத்தும் வீரப்பம்பாளையம் (எண் -2) நியாய விலை கடை வாடகை இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து நியாயவிலை கடை கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழா ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.உடன் ஈரோடு மாநகராட்சி மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார், 19-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மணிகண்ட ராஜா, 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமரவேல், ஈரோடு மாநகராட்சி காங்கிரஸ் இரண்டாம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்