பூண்டி ஒன்றியத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா….
மாவட்டம் பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் சுமார் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இதனை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கும்மிடிபூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இவ்விழா பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே. சந்திர சேகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி தலமையில் நடைபெற்றது.
இந்நிகழச்சினை மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன் ஏற்பாடு செய்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாசா பிரதிப் அஷோக்குமார் ஒன்றிய கவுன்சிலர் காயத்திரி லட்சுமிகாந்த் ஊராட்சி செயலாளர் யோகானந்தம் துணைத் தலைவர் சாந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தானர்.