தலைப்பு செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு மாநகராட்சியில் 11 மேயர் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு மாநகராட்சியில் 11 மேயர் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது – மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்கிறது பலமாக இருக்கிறது மேலும் பலமடையும் என கோவில்பட்டி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் முன்னாள் எம்எல்ஏ அழகர்சாமியின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அழகு முத்து பாண்டியன், மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் நல்லையா, மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, காசி விசுவநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த
அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலத்தில் நடத்தாமல் இருந்தது திமுக ஆட்சியில் பொறுப்பேற்றவுடன் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டு மென்றும் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டது
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது குறிப்பாக 21 மாநகராட்சிகளில் 11 இடங்களை பெண்கள் மேயராக வருவதற்கு ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே போல் பட்டியல் இன பெண்கள் இருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு
கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது இந்த கூட்டணி தொடர்கிறது பலமாக இருக்குது இது மேலும் பலமடையும் எதிர்த்தரப்பு அணி பலவீனம் அடைந்துள்ளது.
இந்த வெற்றியில் சிறு சிறு குறைபாடுகள் இருக்கலாம் ஆனால் தமிழக முதல்வர் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது அவர் முதிர்ச்சி பெற்ற அரசியல் தலைவர் என்பதும் தோழமைக் கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்பதிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பலம் பெற வேண்டும் என்ற முறையிலும் அறிக்கை வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது அவருடைய வேண்டுகோளை ஏற்று கொண்டு பலர் பதவிகளை விட்டார்கள் மற்றவர்கள் பதவி விலகுவார்கள் என நம்புகிறோம்.

கோகுல்ராஜ்
கொலை வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று 10 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு 8ம்தேதி அளிக்கப்படும்
என நீதிமன்றம் அறிவித்தது இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
8ம் தேதி தண்டனை வழங்கும் போது அந்த தண்டனை மிகக் கடுமையான தண்டனையாக இருக்கும் என நம்புகிறோம் ஏனென்றால் ஆணவப்படு கொலையை ஒரு போதும் இந்த நாகரீக உலகத்தில் அனுமதிக்கவே முடியாது இப்படிப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அப்போதான் இது மாதிரி குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும் குறிப்பாக தமிழ்நாடு சமூகநீதி அதிகம் பேசிக் கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனமான செயலை கண்டிப்பதோடு 10 பேருக்கு தண்டனை அதிகபட்ச தண்டனையாக இருக்க வேண்டும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் இதுவரை பிடிபடாமல் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது
ஆணவப்படுகொலை இன்னும் நடைபெறாமல் இருக்க தனி சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம் மீண்டும் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்
கர்நாடக அரசு அரசியல் ஆதாயம் தேட வேண்டு மென்பதற்காகவே மிகக் குறுகிய அரசியல் நோக்கத்தோடு கர்நாடக,தமிழக மக்களிடையே மோதலை உருவாக்க கூடிய முறைகளைப் பின்பற்றி வருவது கவலைக்குரியது மேகதாது விஷயத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பது மிக கண்டனத்துக்குரியது இதில் உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் அதேபோல் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறும்
உக்ரேனில் போர் நடைபெற்று வருவதால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களை
மீட்க நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். இதில் மத்திய அமைச்சர் நாங்கள் என்ன தோளில் சுமந்து வர முடியும் என்று கூறுகிறார் பொறுப்பற்ற முறையில் பேசுவது கவலை கொள்வதாக இருக்கிறது இதில் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கூறினார்.
