தலைப்பு செய்திகள்
உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா மார்ச் 13 ம் தேதி நடக்கிறது.

உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா மார்ச் 13 ம் தேதி நடக்கிறது.
உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே உள்ள செங்குளம் பகுதியில் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் என தனித் தனி சன்னதிகளும் மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் பரமபத மோட்ச அனுபவம் பெறுவதற்கான பரமபத வாசலும் (சொர்க்க வாசல்) அமைந்துள்ளது. மேலும் 5 நிலைகளுடன் கூடிய 69 அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்த ராஜகோபுரம்அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் இரு புறமும் அமிர்த கலச கருடாழ்வாரும், சஞ்சீவமலையை கரங்களில் ஏந்திய ஸ்ரீ ஆஞ்சநேயரும் உள்ளனர். ராஜ கோபுரத்தின் முன்புறம் சங்கநிதி, பதுமநிதி, பின்புறம் கங்கா, யமுனா, தேவிகளும் அமைந்துள்ளது விசேச மானது. ராஜகோபுரம் முன்புறம் பீடத்துடன் கூடிய 23 அடி உயர கருட கம்பமும் கம்பீரமாய் அமைந்துள்ளது. இந்நிலையில் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா மார்ச் 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் 24 வது பட்டம் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு மங்களா சாசனம செய்து அருளாசி வழங்க உள்ளார்கள். இதையொட்டி மூன்று நாட்கள் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. நிர்வாக அறங்காவலர் ப.இராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் வேலுசாமி, அமர்நாத், ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
