இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன்

இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக பொறுப்பு ஏற்ற ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு வாழ்த்து கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் மாவட்டம் 250 எஸ், மாவட்டத்தின் 2024,மற்றும் 2025ம் ஆண்டின் ஆளுநராக அலை ராஜன், மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குனராக ஸ்ரீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள், கடந்த 17ம்தேதி தலைநகர் டெல்லியில் உள்ள ஆக்ரா பகுதியில் நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சியின் மூலமாக பதவியேற்று கொண்டனர். மீண்டும் அவர்கள் இன்று விமான மார்க்கமாக கோவை திரும்பினர். அவர்களுக்கு இன்று கோவை மாவட்டத்தின் சார்பாக வரவேற்புவிழா கோவை ஆர்எஸ் புரம் பகுதியின் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சர்வதேச இயக்குனர் அலை டிஎஸ் விஜயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதல் துணை ஆளுநர் எம் குணசேகரன், இரண்டாம் துணை ஆளுநர் எஸ் சண்முகம் ஆகியோர் இருவருக்கும் வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் எஸ் தர்மராஜ், சிஜிவி கனேஷன், அமைச்சரவை செயளாளர் அலை குமார், பொருளாளர் பிரசாத், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அலை பிரபாகரன் என அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை மண்டல தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மாற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தறனர். இந்த நிகழ்ச்சியனை அலை லோகநாதன் வரவேற்புரையாற்றினார். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.