தலைப்பு செய்திகள்
சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு.
கொரோனா தடுப்பூசி செய்துகொள்வதில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஆர்வம் காட்ட அறிவுறுத்தல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் பின்னர் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு செய்து செய்தியாளரிடம் கூறியதாவது,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொருத்தவரையில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 92 சதவீதத்தை கடந்து உள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 72 சதவீத கடந்து இருந்தாலும் மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்திலே குறைவாக உள்ளது குறிப்பாக கடலோர மீனவ கிராமங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் இல்லாமல் மக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர்,மீனவர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்வரவேண்டும், தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளுமே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர் அவர்கள் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பு ஊசி போட்டு கொள்வதன் அவசியத்தை தெரியப்படுத்தி ஊசி போட்டுக் கொள்ள பொதுமக்களை அழைத்து வர வேண்டும் எனவவும் மேலும் தடுப்பூசி போட்டு கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.
மேலும் கொரோனா காலத்தில் சீர்காழி அரசு மருத்துவமைனையில் ஒப்பந்தம் முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும் சம்பளம் இதுவரையில் வழங்க வில்லை என தூய்மை பணியாளர்கள் அமைச்சரிடம் சம்பளம் வழங்க கோரி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, செம்பனார்கோயில் ஒன்றியம் சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொறையார் அரசு மருத்துவமனை, தரங்கம்பாடி அரசு மருத்துவமனை ஆகியவற்றை மாண்புமிகு மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் பலர் மருத்துவமனை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். மேலும் பழமை வாய்ந்த தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட்டார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன்,
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.குருநாதன்
மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.