தலைப்பு செய்திகள்
கொட்டப்பட்டியில் -24 மணிநேரமும் இயங்கும் தனியார் மதுபானக்கடையை அகற்றக்கோரியும், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு.
கொட்டபட்டி- 24 மணிநேரமும் இயங்கும் தனியார் மதுபானக்கடையை அகற்றக்கோரியும்,கடந்த மூன்று தினங்களுக்கு முன் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் இடம் மணு அளித்து 50க்கும் மேற்பட்ட நபர்கள் காத்திருப்பு போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி கிராமம் கொட்டப்பட்டியில் ஆயிரத்திற்கும் மேலான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சட்டத்திற்கு புறம்பாக நிறைய இடங்களில் மதுபானங்கள் விற்று வருவதாகவும் அதை தட்டி கேட்டால் அவர்கள் தரப்பில் கொலை மிரட்டல் வருவதாகவும் அவ்வூரைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இது சம்பந்தமாக அவர் கூறுகையில் காமாட்சிபுரம் என்ற ஊரைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சார்ந்த லூயிஸ் (எ) சின்னவர் மற்றும் அவரது மகன் ஜேசுராஜ் ஆகியோர் அப்பகுதியில் 10 இடங்களில் தனியார் மதுபான கடை அமைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்று வருவதாகவும் மேலும் இதுபற்றி அருகில் உள்ள அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த சுமன் என்பவர் இந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கக்கூடாது என்று தட்டிக் கேட்டதற்கு கடந்த 03/03/22 அன்று இரவு 10 மணி அளவில் பழனி பைபாஸ் சாலையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டல் அருகில் சின்னவர் தூண்டுதலின் பேரில் அவரது மகன் சேசுராஜ் என்பவர் சுமனை கத்தியால் குத்தி கொலைவெறி தாக்கல் செய்துள்ளதாகவும் அதேநேரத்தில் சுமன் என்பவருக்கு கத்திக்குத்து ஐந்து இடங்களில் குத்துபட்டு அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
எனவே குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளிகள் காமாட்சிபுரம் லூயிஸ் (எ) சின்னவர் என்பவர் மீதும் இவரது தூண்டுதலின் பேரில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சேசுராஜ் என்பவர் மீதும் உடனடியாக எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கீழ் நடவடிக்கை எடுக்க அது சமந்தமான புகார் மனு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் மனு கொடுத்ததாக கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தும், அப்பகுதியில் அரசுக்கு எதிராக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய பின் கலைந்து சென்றனர்