செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு …
பள்ளப்பட்டி சபியா நகரில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு …
அரவக்குறிச்சி அடுத்து பள்ளப்பட்டி நகராட்சி உட்பட்ட சபியா நகரில் குழிகள் பறிக்கப்பட்டு
5 ஜி நெட்வொர்க் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
பொதுமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய இந்த பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் 80 குடும்பங்கள் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் ஏர்டெல் 5ஜி டவர் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி எதிர்ப்பு தெரிவித்தனர்
குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
மேலும் செல்போன் டவர் அமைப்பதற்கான எவ்வித தகவலும் அனுமதியும் பெறாமல் ஷபியா நகர் தெரு மக்கள் பொதுமக்கள் ஒப்புதல் கேட்கப்படாமலும் செல்போன் டவர் அமைக்க பணி நடைபெற்று வருவதாகவும் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான கதிர்வீச்சினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் சார்பாக பள்ளப்பட்டி நகராட்சியில் மனு அளித்ததாகவும் அந்த மனுவின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.