குவைத் நாட்டில் வீட்டு ஓட்டுனராக பணிபுரிந்த கணவர் காணவில்லை
குவைத் நாட்டில் வீட்டு ஓட்டுனராக பணிபுரிந்த கணவர் காணவில்லை, தொலைபேசிகள் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை அவரை மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும் என்று மனைவி நர்கிஸ் பானு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் மேலத்தெருவில் அப்துல் ஜப்பார் மனைவி நர்கிஸ் பானு முகவரியில் வசித்து வருகின்றார்.நர்கீஸ் பானுவுக்கு 12 வயது மனவளர்ச்சி குன்றிய பெண் பிள்ளையும்.10, மற்றும் 6 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.குடும்ப கஷ்ட சூழ்நிலையால் வேலைக்காக அப்துல் ஜப்பார் குவைத் நாட்டிற்கு ஒரு வீட்டிற்கு ஓட்டுனராக பணிபுரிய கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி குவைத் நாட்டிற்கு காரைக்கால் நவீன் ஏஜென்சிஸ் மூலமாக வேலைக்கு சென்றுள்ளார்.
சென்ற மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அப்துல் ஜப்பார் அவரது மனைவி நர்கிஸ் பானுவுக்கு போனில் தொடர்பு கொண்டு எனக்கு வேலை செய்யும் அரேபியர் வீட்டில் மிகுந்த கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் சரியான தூக்கம் சாப்பாடு இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் என்னை எப்படியாவது இந்தியாவிற்கு அழைத்துக் கொள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளேன் என்னை உடனடியாக ஊருக்கு அழைத்துக் கொள் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவரை மீட்டு தர கோரி மனு அளித்துள்ளார்.